×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சர்க்கார் படத்தின் மூலம் யார் தமிழக முதல்வராக வேண்டும் என விஜய் சொல்கிறார் தெரியுமா?

CM IN SARKAR MOVIE

Advertisement

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சர்க்கார். பல கோடி வசூல் சாதனை படைத்துள்ள இந்த படத்திற்கு சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை. 

படம் முழுக்க தமிழகத்தின் அரசியல் சூழலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பல உண்மைக் கதாபாத்திரங்களை நினைவுப்படுத்துகிறது. வில்லி வேடத்தில் வரும் வரலட்சுமியின் கதாபாத்திரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பதால் சினிமாவையும் தாண்டி மிகப்பெரிய அரசியல் பிச்சனையாய் வெடித்துள்ளது சர்க்கார் விவகாரம். 

படத்தில் வரும் எதிர்மறை காட்சிகளைப் பற்றி மட்டும் முன்னிலைப்படுத்தி பலர் போராட்டங்களை கையிலெடுத்தனர். ஆனால் அதே படத்தில் வரும் நல்ல விசயங்களை பற்றி யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அப்படி படத்தில் பலருக்கு பிடித்த ஒரு விசயம்,  தேர்தலில் வெற்றிப்பெறும் விஜய் முதல்வர் பதவி வேண்டாம் என்றும் அதே தேர்தலில் வெற்றிப்பெற்ற முன்னாள் IAS அதிகாரி சற்குணம் IAS என்பவரை முதல்வராக்க விரும்புவதாக தெரிவிக்கிறார்.

இந்த சற்குணம் IAS மூலம் மதுரை முன்னாள் ஆட்சியர் திரு.சகாயம் IAS அவர்களை நினைவுப்படுத்துவதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு இளைஞர்கள் ஒன்றுகூடி திரு.சகாயம் IAS அவர்களை அரசியலுக்கு வரவேண்டும், தமிழக முதல்வராக வேண்டும் என கோரிக்கை விடுத்தது தான். ஆனால் மக்கள் சேவை செய்ய பல வழிகள் இருக்கின்றன, அரசியல் ஒன்று மட்டும் இல்லை என கூறி மறுத்துவிட்டார் திரு.சகாயம் IAS அவர்கள். மேலும் மக்கள் சேவை செய்ய விரும்பும் இளைஞர்களின் ஆர்வம் வீணாகிவிடக்கூடாது என்பதற்காக மக்கள் பாதை என்ற இயக்கத்தை துவங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

இவர் தமிழ் மொழியின் மீது தீராத பற்று கொண்டவர். "ஆங்கிலம் என்பது அறிவல்ல, அது வெறும் மொழியே" என அடிக்கடி கூறுவார். 

யார் இந்த சகாயம் IAS? 
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த உபகாரம் பிள்ளை - சவேரி அம்மாள் தம்பதியினரின் ஐந்து மகன்களில் கடைசியாகப் பிறந்தவர். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் புகழ்பெற்ற இலயோலா கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பு (சமூகத் தொண்டு), சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு என அடுத்தடுத்து தன் கல்வித் தகுதியை திரு.சகாயம் உயர்த்திக் கொண்டார்.

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்பது இவரது கொள்கையாகும். இந்த வாசகத்தை அவரது இரு கையின் பின்புறம் காணலாம். அவரது 23 ஆண்டு பணிக்காலத்தில் 24 முறை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தாம் பணியாற்றிய மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளாலும் நேர்மையான அணுகுமுறைகளாலும் மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டவர். தனது சொத்துக் கணக்குகளை வெளியிட்ட முதல் தமிழக IAS அதிகாரியாவார். 

- 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான மூன்றாவது பரிசினைப் பெற்றார்.

- கிரானைட் மற்றும் கனிம மணற் கொள்ளை பற்றி தமிழக அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கச் செய்தார். குற்றவாளிகள் தடயங்களை அழித்துவிடக்கூடாது என்பதற்காக இரவு முழுதும் சுடுகாட்டில் படுத்துறங்கினார்.

- ஏதிலியர் முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழர்களுக்காக தையல் பயிற்சி அளித்து தையல் வேலை வாய்ப்பு, மற்றும் கணினி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். 

- ஊனமுற்றவர்களுக்கு ‘ஊன்று கோல் திட்டம்’, உழவர்களுக்காக ‘உழவன் உணவகம்’ திட்டம் ஆகியவற்றையும் சிறப்புற செயல்படுத்தினார்.

இத்தகைய புகழுக்கு சொந்தக்காரரான திரு.சகாயம் IAS அவர்களை தான் சற்குணம் IAS என்ற பெயரில் சர்க்கார் படத்தில் விஜய் முதல்வராக சுட்டிக்காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#CM IN SARKAR MOVIE #vijay #Sarkar #sargunam IAS in sarkar #sagayam ias
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story