×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாறுமாறாக அடிச்ச ஜாக்பாட்! பணபெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது யார்னு பார்த்தீங்களா? ஷாக்கில் ரசிகர்கள்!!

தாறுமாறாக அடிச்ச ஜாக்பாட்! பணபெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது யார்னு பார்த்தீங்களா?

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தற்போது நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடி திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் 20 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் தற்போது பாவனி, பிரியங்கா, தாமரை, நிரூப், அமீர், சிபி, ராஜு ஆகியோர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதியில் வெற்றி பெறப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் பணப்பெட்டி டாஸ்க் கொடுத்துள்ளார். அதன்படி பிக்பாஸ் கொடுக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற நினைக்கும் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்லலாம்.

இந்த நிலையில் முதலில் 3 லட்சம் பணம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 12லட்சம் வரை பிக்பாஸ் பணம் கொடுத்துள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளராக இருந்து வந்த சிபி பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cibi #12lakhs #bigboss
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story