அட! அச்சு அசல் நடிகை சித்ராவை போலவே இருக்கும் இவர் இந்த பிரபல நடிகையின் பேத்தியா? செம ஷாக்கில் ரசிகர்கள்!
அச்சு அசல் நடிகை சித்ராவை போலவே இருக்கும் பெண் பிரபல நடிகையின் பேத்தி என புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சித்ரா. அதனை தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில் சித்ராவிற்கு கடந்த மாதம் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடந்த இரு மாதத்திற்கு முன்பே இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சித்ரா மரணத்தால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களை ஆறுதல் அடைய வைக்கும் வகையில் அச்சு அசல் சித்ராவை போலவே இருக்கும் கீர்த்தனா என்பவரது புகைப்படம் இணையத்தில் வைரலானது. சாஃப்ட்வேர் இன்ஜீனியரான கீர்த்தனா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2ல் பங்கேற்றுள்ளாராம். மேலும் கீர்த்தனா பல தமிழ் படங்களில் நடித்துள்ள பழம் பெரும் நடிகையான ஷண்முக சுந்தரியின் பேத்தி என தெரியவந்துள்ளது. நடிகை ஷண்முக சுந்தரி மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுவுக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் பெருமளவில் பரிச்சயமானவர்.