தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சின்னத்தம்பி நந்தினிக்கு இரண்டாவது திருமணம்.! மாப்பிள்ளை யார் தெரியுமா?

chinnathambi serial bavani second marriage

chinnathambi serial bavani second marriage Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்து சமீபத்தில் முடிவடைந்த சின்னதம்பி தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை பவானி. கதாநாயகியாக நடித்த இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.  

பவானி கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரதீப் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். அவர் கடந்த 2017ம் ஆண்டில் குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். 

Chinathambi

கணவரின் மறைவால் பெரும் துக்கத்தில் இருந்த பவானி, பின்னர் சின்னதம்பி தொடரில் நடிக்க தொடங்கினார். மேலும் இந்நிலையில் அவரது பெற்றோர்கள் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளக்கூறி வற்புறுத்தி வந்துள்ளனர்.

இவர் தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சின்னத்தம்பி நந்தினி இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் எனக்கு  மறுமணம் செய்துகொள்ள விருப்பமில்லை ஆனால் தனது பெற்றோர்கள் வற்புறுத்தலினால் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளேன்.

மேலும் தனக்கு ஆனந்த் என்பவருடன் திருமணம் நடைபெறவுள்ளது. அவர் தனது குடும்ப நண்பர். மேலும் விரைவில் திருமணத் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பவானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chinathambi #nandhini #marriage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story