×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

China government announcement for coronovirus dead people family

Advertisement

சீனாவில் வுஹான் நகரில் உயிரை குடிக்கக்கூடிய கொடூர கொரனோ வைரஸ் தோன்றி தற்போது அதிதீவிரமாக பரவி வருகிறது.இந்த கொரனோ வைரஸால் தாக்கப்பட்டு இதுவரை 360க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் உலகம் முழுவதும் 22000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதனால் பல நாடுகளும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.

இந்த கொடூர குணம் வைரசை குணப்படுத்த மருந்துகள் எதுவும் இல்லை. ஆனால் இதனை கட்டுப்படுத்த சீன அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பெய்ஜிங்கின் சிவில் விவகார அமைப்பு கொரோனா வைரஸ் பாதிப்பால்  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது கொரோனா வைரஸ் என்பது அதிகளவில் பரவக் கூடிய கொடிய நோய். அத்தகைய வைரசால் உயிரிழந்தவர்களை உடனடியாக  இறுதிசடங்குகள் முடித்து விரைவில் தகனம் செய்ய வேண்டும். மேலும் இது பிறருக்கும் பரவாத வகையில் இறுதி சடங்குகளை மிகவும் எளிமையாக மேற்கொள்ள வேண்டும். அதிக ஆட்களை சேர்க்க வேண்டாம்.

மேலும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் ஊழியர்கள் கண்டிப்பாக கையுறை அணிய வேண்டும். மேலும் தொற்று நோயை குணப்படுத்த வெப்பநிலை சோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் திருமணம் என்றால் பெருமளவில் கூட்டம் சேரும். அதனால் தற்போது அது போன்ற நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் மறுஅறிவிப்பு வரும் வரை திருமணம் போன்ற விழாக்கள் எதுவும் வேண்டாம் எனவும் சீனஅரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coronovirus #funeral #dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story