தெய்வத்திருமகள் சாராவா இது! பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங் ஜோடியாக நடிக்கும் சாரா ! இணையத்தை தெறிக்கவிட்ட புரோமோ வீடியோ.......
தெய்வத்திருமகள் படத்தின் விக்ரம் மகள் நிலாவா இது! நடிகர் ரன்வீர் சிங் ஜோடியாக நடிகை சாரா பாலிவுட்டில் ! இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ.....
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலர் மனதில் இடம் பிடித்தவர் சாரா. இவர் முதலில் சைவம் படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகத்தில் பயணம் தொடங்கினார். தொடர்ந்து தெய்வதிருமகள் திரைப்படத்தில் விக்ரம் நடித்தபோது, அவருடைய மகளாக நடித்ததால் பெரும் பாராட்டு பெற்றார்.
சாரா அதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் இளம் நந்தினி கதாபாத்திரத்தில் காட்சியளித்து, மேலும் புகழ்பெற்றார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது சாரா பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். ரன்பீர் கபூர் நடிக்கும் துரந்தர் திரைப்படத்தில், அவர் ஜோடியாக இணைந்துள்ளார். இவர் நடிக்கும் முதல் ஹிந்தி படம் என்பதாலேயே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: என்னவோ போ.. மனவேதனையை போஸ்ட்டில் கொட்டி தீர்த்த ஆர்த்தி ரவி! வைரலாகும் பதிவு.! ரசிகர்களின் கருத்துக்கள்...
பிறந்த நாளில் வெளியான துரந்தர் படம் பர்ஸ்ட் லுக்
சாராவின் பிறந்த நாளை முன்னிட்டு துரந்தர் படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டது. இதில் இந்திய உளவாளியாக ரன்பீர் கபூர் நடித்துள்ளார். சாரா ஒரு அரசியல் கட்சி தலைவரின் வாரிசாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. துரந்தர் படத்தின் இந்த முன்னோட்டம் சாராவுக்கு பாலிவுட்டில் வெற்றிக்கான கதவுகளைத் திறந்துவைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜமீன் பரம்பரை! சினிமாவால் இன்றோ பரிதாப நிலை! யார் அந்த நடிகர் தெரியுமா?