×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சேரன் முதன்முதலாக என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!! ஆதரவளிக்கும் ரசிகர்கள்!!

cheran tweet about bigboss experience

Advertisement

பிக்பாஸ் சீசன்மூன்று கமல்ஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்க 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்திற்கு சில வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.
 
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது இறுதிக்கட்ட போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், ஆகியோர் மட்டுமே கடினமாக உழைத்து வருகின்றனர்.மேலும் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல அனைவரும் முழு மூச்சுடன் போராடி வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் மிகவும் கடுமையான டாஸ்குகளை கொடுத்து வருகிறார் பிக்பாஸ்.அதனையும் போட்டியாளர்கள் முழுமூச்சுடன் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து பிரபலமான இயக்குனர் சேரன். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் தனது பணியை சிறப்பாக செய்து வந்தார். மேலும் இளைஞர்களுக்கு இணையாக தன்னால் முடிந்தவரை கடுமையாக போராடி வந்தார். இந்நிலையில் அவர் கடந்த வாரம் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அதனை தொடர்ந்து அவர் எப்பொழுது பேட்டி கொடுப்பார் என ரசிகர்கள் பெருமளவில் காத்திருந்த நிலையில் தற்போது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தலை வணங்கி நிற்கிறேன் எனது 90 நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்து கொண்டு என்னை தாலாட்டி தட்டிக் கொடுத்து என் அன்பின் பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி. நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள் மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cheran #bigboss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story