×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சந்திரமுகியோட பெஸ்ட் பிரண்ட் நான்.. வைரலாகும் வடிவேலு வீடியோ.!

சந்திரமுகியோட பெஸ்ட் பிரண்ட் நான்.. வைரலாகும் வடிவேலு வீடியோ.!

Advertisement

தமிழில் கடந்த 2005ம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, நாசர் வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லக்ஷ்மி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, கீரவாணி இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து தற்போது இந்த படத்தின் எடிட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் வடிவேலுக்கான டப்பிங் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், சந்திரமுகி பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3, பார்ட் 10 வரை எடுத்தாலும் சந்திரமுகிக்கு பெஸ்ட் பிரண்டு நான் தாண்டா என வடிவேலு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vadivelu #Chandramukhi 2 #Lyca Production #P Vasu #Ragawa lawrence
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story