இந்த லிஸ்டில் இப்போ இவுங்களுமா? காதல் கணவரை பிரியும் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்....!!!
கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவருடன் எடுத்த புகைப்படங்களை நீக்கியதைத் தொடர்ந்து விவாகரத்து வதந்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சைத்ரா ரெட்டி குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் நீக்கியிருப்பதைத் தொடர்ந்து, விவாகரத்து தொடர்பான வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன. இருப்பினும், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இன்ஸ்டாகிராம்மில் பதிவுகள் நீக்கம்; பரவும் கிசுகிசுக்கள்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரின் மூலம் இல்லத்தரசிகள் உட்பட பல தரப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சைத்ரா ரெட்டி. அதற்கு முன்பு 'யாரடி நீ மோகினி' தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். சீரியல்களுடன் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பேச்சுகளால் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா... இன்ஸ்டாகிராம்மில் மட்டும் ஒரு மாதத்துக்கு லட்ச லட்சமாய் சம்பாதிக்கும் நடிகை ஸ்ரீலீலா! வாயடைத்துப்போன ரசிகர்கள்.!!!
திருமண வாழ்க்கை குறித்து எழுந்த கேள்விகள்
தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சமலாவை காதலித்து சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட சைத்ரா ரெட்டி, தங்களது குடும்ப வாழ்க்கை தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வந்தார். இந்த ஜோடிக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.
இந்நிலையில், திருமண புகைப்படங்கள் மற்றும் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், விவாகரத்து முடிவை நோக்கி சென்றுவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
அதிகாரப்பூர்வ விளக்கம் இல்லை
சமீப காலமாக சில பிரபலங்கள் உறவு பிரிவு அறிவிப்புக்கு முன்பாக இணைந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிய சம்பவங்கள் நடந்துள்ளதால், சைத்ரா ரெட்டியின் நடவடிக்கையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக சைத்ரா ரெட்டியோ அல்லது அவரது கணவர் ராகேஷ் சமலாவோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத வதந்திகளாகவே பார்க்கப்படுகின்றன.