×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கேப்டன் வேற ரகம்.. மீண்டும் படத்தில் களமிறங்க போகிறாரா விஜயகாந்த்?.. இயக்குனர்களுடன் விஜயகாந்தின் லேட்டஸ்ட் போட்டோ வைரல்..! 

கேப்டன் வேற ரகம்.. மீண்டும் படத்தில் களமிறங்க போகிறாரா விஜயகாந்த்?.. இயக்குனர்களுடன் கேப்டன் விஜயகாந்தின் லேட்டஸ்ட் போட்டோ வைரல்..! 

Advertisement

கோலிவுட்டில் முன்னணி நடிகராகவும், அனைவராலும் செல்லமாக கேப்டன் என்றும் அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்களும் மக்கள் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளது என்று கூறலாம்.

அதன்பின் இவர் அரசியலில் முழுமையாக களமிறங்கிய நிலையில், தற்போது உடல்நலகுறைவு காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் உடல்நிலை சரியாகி மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி கொடுப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் "மழை பிடிக்காத மனிதன்" என்ற படத்தில் விஜயகாந்த் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் கூறும்போது நடிகர் விஜயகாந்த் படத்தில் நடிப்பார் அல்லது அவருடைய குரலாவது இப்படத்தில் இடம்பெறும் என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் திரைதுறையைச் சேர்ந்த முக்கிய இயக்குனர்களான ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ரவி மரியா, விக்ரமன், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் விஜயகாந்தை நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#captain vijayakanth #latest photo #director #கேப்டன் விஜயகாந்த் #tamil cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story