×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா இரண்டு வாழைப்பழம் 442 ரூபாயா? ஷாக்காகி பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோவை பாருங்க!!

bollywood actor pay rs 422 for 2 bananas

Advertisement

பாலிவுட் சினிமாவில் நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ராகுல் போஸ். இவர் விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஷூட்டிங்கிற்காக சண்டிகருக்கு சென்ற ராகுல் போஸ் ஐந்து நட்சத்திர ஒட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். 

இந்நிலையில் அங்கு உடற்பயிற்சி செய்த அவர், வாழைப்பழம் வேண்டும் என்று ஹோட்டல் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர்க்கு வாழைப்பழம் மற்றும் அதற்கான பில் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் வாழைப்பழத்திற்கான பில்லை கண்ட ராகுல் போஸ் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் அதில் இரண்டு பழங்களுக்கான விலை, ஜிஎஸ்டியோடு சேர்த்து ரூ. 442.50 என்று போடப்பட்டிருந்தது.



இதனை தொடர்ந்து இதுகுறித்து வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். பழங்களை சாப்பிட இவ்வளவு செலவாகாது என யார் கூறியது.இதை பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் பழத்துடன் அதற்கான பில்லும் உள்ளது.மேலும் இதுகுறித்து கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bananas #5 star hotel
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story