×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

5 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை படைக்கும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ; கண்டு மகிழுங்கள்.!

5 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை படைக்கும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ; கண்டு மகிழுங்கள்.!

Advertisement

 

தமிழில் கோலமாவு கோகிலா, பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்த நெல்சன் திலீப்குமார், பிலியாமென்ட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதில் முதல் திரைப்படமாக ப்ளடி பெக்கர் என்ற படத்தை தயாரித்து வழங்குகிறார். இப்படத்தில் நாயகனாக கவின் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

படப்பிடிப்பு உட்பட பிற பணிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இந்த அறிவிப்பை நெல்சன் வீடியோ ஒன்றின் வாயிலாக பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது. 

பிளடி பெக்கர் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ:

பிளடி பெக்கர் படம் குறித்து: சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், ஜென் மார்ட்டின் இசையில் உருவாகும் இப்படத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலரும் நடிக்கின்றனர். 

நடிகர் கவின்: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமான நடிகர் கவின் பீட்சா, இன்று நேற்று நாளை, சத்ரியன், நட்புன்னா என்னனு தெரியுமா, லிப்ட், தடா, ஸ்டார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் தடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஸ்டார் திரைப்படம் விரைவில் வெளியாகிறது.  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Actor Kavin #Bloody Beggar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story