×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அது உங்களுக்குதான் தெரியும்.! வேற லெவல் புகைப்படத்துடன் வாழ்த்து கூறிய நடிகை பிந்து மாதவி!அட.. யாருக்குனு பார்த்தீங்களா!!

அது உங்களுக்குதான் தெரியும்.! வேற லெவல் புகைப்படத்துடன் வாழ்த்து கூறிய நடிகை பிந்து மாதவி!அட.. யாருக்குனு பார்த்தீங்களா!!

Advertisement

1960 ஆம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் கமல்ஹாசன். அதனைத் தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பலமொழிகளிலும், பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

உலக நாயகனாக கொடிக்கட்டி பறக்கும் அவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர் பாடலாசிரியர், பின்னணி பாடகர், நடன இயக்குனர் மற்றும் அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டு வலம் வருகிறார். இவருக்கென உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகர் கமல் நேற்று தனது 68-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். அவருக்கு பல்வேறு மொழியை சேர்ந்த திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகை பிந்து மாதவி தனது ட்விட்டர் பக்கத்தில் கமலுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, மினுமினுப்பும் கவர்ச்சியும் நிறைந்த இவ்வுலகில் சுற்றிலும் பல ஆண்கள் உள்ளனர். ஆனால் நீங்கள் உண்மையான ஜென்டில்மேன் என கூறியுள்ளார். மேலும் அதில் அவர், ஒரு பெண்ணை எவ்வாறு ஸ்பெஷலாக உணர வைப்பது என்பது உங்களுக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bindhu mathavi #birthday #kamal
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story