ரஜினியுடன் ஒரு சீன் நடித்துவிட்டு, உயிரைவிட்டாலும் மகிழ்ச்சியே.! மிக உருக்கமாக பேசியது எந்த நடிகர் தெரியுமா?
bijili ramesh talk about rajini

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில் பேட்ட படத்திற்கு பிறகு AR முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்துவருகிறார். மேலும் இதில் அவர் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார்.
இந்நிலையில் இதன் பட பிடிப்பு வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.மேலும் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் எனவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இணையத்தின் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில் நடித்து வருபவர் பிஜிலி ரமேஷ். இவர் தீவிர ரஜினி ரசிகராவார்.மேலும் இவர் தற்போது யாஷிகா மற்றும் யோகிபாபு நடித்துள்ள ஸாம்பி என்ற படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில், சூப்பர் ஸ்டாருடன் ஒரே ஒரு சீனில் நடித்துவிட்டு உயிரை விட்டாலும் எனக்கு சந்தோஷம் என கூறியுள்ளார்.