பிகில் படத்தின் ஒரு வார வசூல் எவ்வளவு தெரியுமா?
Bigil vasul
இயக்குனர் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துள்ள படம்தான் பிகில். இந்தப்படத்தில் ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் விஜய் இரண்டு கேரக்டர்களில் மிகவும் அருமையாக நடித்துள்ளார்.
அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் அவர்கள் கால்பந்து விளையாடும் பெண்களின் கோச்சாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இப்படம் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மேலும் இந்த படம் ஒரு வாரத்தில் மட்டும் உலகமெங்கும் 200 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது. அதிலும் தமிழகத்தில் மட்டும் 9 கோடி ரூபாய் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி இந்தபடம் கைதி பட வசூலை விட அதிகம் எனவும் கூறப்படுகிறது.