பிகில் படத்தின் முதல் காட்சி இதுதான் ஓப்பனாக கூறிய பிரபலம்! சந்தோசத்தில் ரசிகர்கள்
Bigil first seen

தளபதி விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் பிகில். இயக்குனர் அட்லீ நடிகர் விஜயை வைத்து மூன்றாவது முறையாக உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்றாலும் ரசிகர்கள் தற்போது முதல் ஆங்காங்கு கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் இந்த படத்தின் ட்ரைலர் கடந்த சனிக்கிழமை வெளியாகி பல கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் யூடியூபிலும் டிரைலர் சாதனையில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றிய புதிய தகவலை படத்தின் ஆடை வடிவமைப்பாளர் அணு வரதன் கூறியுள்ளார்.
அதாவது படத்தின் முதல் காட்சி நயன்தாரா திருமண கோலத்தில் வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது என கூறியுள்ளார். மேலும் அதனை தான் முதலில் இயக்குனர் அட்லீ எடுத்ததாகவும் கூறியுள்ளார்.