பிக்பாஸில் ஐஸ்வர்யாவை பெற்றி பெற வைக்க வித்தியாசமாக ஓட்டு கேட்கும் ரசிகர்...!
biggbiss-vote-for-aiswarya
தமிழில் பிக்பாஸ் முதல் பாகம் வெற்றி அடைந்த நிலையில் இரண்டாம் பாகம் தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இரண்டாம் பாகம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளராக நான்கு பேர் இருக்கிறார்கள். ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா, விஜயலக்ஷ்மி ஆகியோர் தான் இறுதி போட்டியாளர்கள். இன்னும் சில தினங்களில் யார் வெற்றி பெறுவார் என தெரிந்துவிடும்.
இதில் குறிப்பாக ஐஸ்வர்யா தத்தா நிறைய எபிசோட்களில் ஓவராக குறும்பு செய்தும் பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷனில் தப்பித்து இறுதி வரை சென்றுள்ளவர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தத்தாவின் ரசிகர் ஒருவர் அவருக்கு ஓட்டு கேட்டு போஸ்டர்களை ஒட்டி வருகிறார். அந்த போஸ்டரில் எழுதியுள்ள வாசகம் என்னவெனில் தமிழகத்திற்கு வந்து தமிழ் கற்று தமிழுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யாவை வெற்றி பெற செய்து வந்தாரை வாழவைத்த தமிழகம் பெருமை அடைய செய்வோம் என எழுதி போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறார்.