×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள பிக்பாஸ் வனிதா! எந்த திரைப்படம் தெரியுமா? இதோ!

Bigg boss vanitha first movie with actor vijay

Advertisement

விஜய் டிவி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்தவாரம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் ஓன்று மற்றும் இரண்டு தொடர்ந்து சீசன் மூன்றையும் நடிகர் கமல் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். சீசன் மூன்றில் இதுவரை 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துள்ளனனர்.

16 போட்டியாளர்களில் ஒருவர் பிரபல குணசித்ர நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தார். இவரது தந்தையுடன் சண்டைபோட்டு ரோட்டில் போராட்டமெல்லாம் நடத்தினார் வனிதா.

அதேபோல, பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் அதிகமுறை சகப்போட்டியாளர்களுடன் சண்டைபோட்ட வண்ணம் உள்ளார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகள் மட்டும் இல்லை. இவர் ஒரு பிரபல நடிகையாகவும் இருந்துள்ளார்.

இன்று தமிழ் சினிமாவின் தளபதியான விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் வனிதா. இதுதான் வனிதாவின் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigg boss tamil #Bigg boss #Bigg boss vanitha #Vanitha vijayakumar
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story