பிக்பாஸ் வனிதாவுக்கு இப்படியும் ரசிகர்களா? அவர்கள் செய்துள்ளதை பாருங்கள்! வைரல் வீடியோ.
Bigg boss vanitha fans banner for her
பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் இந்த முறை டைட்டிலை வெல்லப்போவது யார் என தெரிந்துகொள்ள மக்கள் ஆவலுடன் உள்ளனர்.
பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே பல்வேறு சர்ச்சை, சண்டைகளில் இவர் சிக்கியதால் இவர் மீது மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பிக்பாஸ் வீட்டிலும் வனிதா விஜயகுமாரால் தினமும் சண்டை-சச்சரவு-கண்ணீர் என ஓடிக்கொண்டிருக்கிறது.
வனிதா என்றாலே பிக்பாஸ் ரசிகர்கள் கழுவி ஊற்றும் வேளையில் சில ரசிகர்கள் சென்னையில் வனிதாவுக்கு பேனர் வைத்துள்ளனர். அக்கா வனிதாவின் போர்வாள்கள் என குறிப்பிட்டு அவர்களின் புகைப்படங்களையும் போட்டுள்ளனர்.