×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டிரைவரை காதலிக்கும் பிக் பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படம் உள்ளே!

Bigg boss vaishnavi loves pilot

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசனில் 
பதினாறு போட்டியாளர்களின் ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் RJ வைஷ்ணவி. இவர் வீட்டில் உள்ளவர்களை பற்றி புறணி பேசுவதால் மக்களால் வெறுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் தனது சக போட்டியாளர் ரம்யாவுடன் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார். அவர்களை பார்த்த அப்போதைய போட்டியாளர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ரித்விகா வென்று முதலிடம் பிடித்தார். ஐஸ்வர்யா இரண்டாம் இடம் பிடித்தார். போட்டியில் வெற்றி பெற்ற ரித்விகாவுக்கு வெற்றிக்கோப்பையும், 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் வைஷ்ணவியின் காதலர் பற்றிய  தகவல்கள்  வெளிவந்துள்ளது. வைஷ்ணவி காதலித்து வரும் அஞ்சன் விமானியாக பணியாற்றுகிறார். இருவரும் இரண்டுவருடங்களாக காதலித்துவருவதாக கூறுகின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் வைஷ்ணவியை சந்தித்த அவர் டேட்டிங் சென்றுள்ளார். பின்னர் அப்போதிலிருந்து இருவரும் தொடர்ந்து உறவில் உள்ளனர் என தெரியவந்துள்ளது. இவர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigg boss tamil #Biggboss season 2 #bigg boss vaishnavi #Vaishnavi lover photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story