பிக்பாஸ் சீசன் 3: யார் யார் எந்த இடம்? வெளியே கசிந்த தகவல்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்.
BIgg boss tamil season 3 winners places

கடந்த நூறு நாட்களுக்கு மேலாக நடந்துவரும் பிக்பாஸ் சீசன் மூன்று இன்று முடிவடைகிறது. இன்று மாலை 6 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பட்டத்தை வென்ற அந்த பிரபலம் யார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்துவிடும்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி முகேன் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளதாகவும், சாண்டி மாஸ்டர் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த லாஷ்லியா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தரும் வகையில் லாஷ்லியா மூன்றாம் இடம்தான் பெற்றிருப்பதாகவும், நடிகை ஷெரின் நான்காம் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தரவரிசை ஏறக்குறைய உண்மை என்று கூறப்பட்டாலும் உண்மையான தரவரிசை என்ன என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.