×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் வரலாற்றில் இதுதான் முதல் முறை! யாரும் எதிர்பாராத திடீர் நிகழ்வு! வீடியோ இதோ.

Bigg boss tamil season 3 comedy events

Advertisement

பிக்பாஸ் சீசன் இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் தற்போது 7 பேர் மட்டுமே விளையாடிவருகின்றனர். போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிவருவதால் அணைத்து போட்டியாளர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசனில் கடந்த இரண்டு சீசன்களில் இல்லாத அளவிற்கு பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நடந்துவருகிறது. அதில் ஒன்றுதான் காமெடி செய்யும் பிக்பாஸ். பிக்பாஸ் குரலை கேட்டாலே நிகழ்ச்சி பார்க்கும் பார்வையாளர்கள்கூட சில நேரங்களில் பயப்பிடுவார்கள்.

காமெடி, கலாய் என்ற வார்த்தைக்கே இடம் இல்லாமல் முகம் ஸ்ட்ரிக்ட்டா மட்டுமே பேசிவந்த பிக்பாஸ் இந்த முறை அதில் இருந்து சற்று மாறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் பற்றி உங்கள்  மனதில் இருக்கும் கோவங்கள், எதிர்பார்ப்புகள் பற்றி கூறலாம் என பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கூறியிருந்தார்.

அதில், நீங்கள் எங்களை அழைக்கும்போது ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா அழைக்கிறிங்க, இனி எங்களை அழைக்கும்போது ஐயா முகேன் கண்பசன் அறைக்கு வாங்கய்யா என அன்புடன் அழைக்கவேண்டும் என பிக்பாஸிடம் கேட்டிருந்தார்.

நேற்றைய நிகழ்ச்சியில் முகெனின் ஆசையை நிறைவேற பிக்பாசும் முகேனை அப்படியே அழைத்தார். பிக்பாஸின் இந்த திடீர் காமெடி போட்டியாளர்கள் உட்பட ரசிகர்களையும் சிரிக்க வைத்தது.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigg boss tamil #Bigg boss
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story