Bigg Boss Diwakar: பிக் பாஸ் திவாகர் மீது பகீர் குற்றசாட்டுகள்.. இதெல்லாம் என்ன கோபால்? ஷாக் மொமண்ட்.!
Bigg Boss Diwakar Allegation: பிக் பாஸ் வீட்டில் இருந்த திவாகரின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், அதற்கு திவாகர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஒருவர் இயல்பாக பேசியதை ஏன் இப்படி அவதூறாக சித்தரிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 9 தமிழ் திவாகர் (Bigg Boss Tamil Diwakar) மீது பல அதிர்ச்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பான வாதங்கள் வைரலாகி வருகின்றன.
பிக் பாஸ் போட்டி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. எந்த நேரத்திலும் சண்டை, வாக்குவாதம் என பார்வையாளர்களின் பரபரப்பை அதிகரித்து வந்தாலும், எதிர்பார்த்த ரீச் இல்லாததால் விஜய் சேதுபதி பலரின் செயல்பாடுகளை வறுத்தெடுக்க தொடங்கிவிட்டார். பிக் பாஸ் சீசன் 9ல் போட்டியாளராக பங்கேற்றவர் வாட்டர்மெலன் ஸ்டார் எனப்படும் திவாகர் (Bigg Boss Tamil Season 9 Diwakar).
இதையும் படிங்க: வேற லெவல்! பிக்பாஸில் களைக்கட்டும் தீபாவளி கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ....
திவாகர் மீதான குற்றசாட்டுகள்:
இவர் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது, பல பெண்களிடம் சென்று ஒருசில பிரச்சனைகள் செய்ததாகவும், ஒருசிலரை இழிவாக பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பிக் பாஸ் 24X7 பார்த்த பலரும் அதனை குற்றசாட்டுகளாக முன்வைத்து இருந்தனர். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பெண் போட்டியாளர் ஒருவரும் ஒரு குற்றசாட்டை முன்வைக்க, அதனை விஜய் சேதுபதி கேட்டபோது மறுத்துவிட்டார்.
வெளியேறினார்:
இதனிடையே, கடந்த வாரம் பிக் பாஸ் எலிமினேஷன் முறையில் திவாகர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வீட்டில் இருந்து வெளியேறுவதை, நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக கலந்துகொண்டிருந்த பலரும் உற்சாக குரல் எழுப்பி வரவேற்றனர். இது அவர் போட்டியில் இடம்பெற வேண்டாம் என்ற எண்ணத்தை பலரும் கொண்டிருந்ததை உறுதி செய்தது. இந்நிலையில், பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற திவாகர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற தகவலை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
சோசியல் மீடியாவில் பேச்சு:
ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் திவாகர் பேசிய பேச்சுக்கள் காரணமாக, அவரது பின்புலத்தை பலரும் ஆராய்ந்து தற்போது தகவலாக வெளியிட தொடங்கிவிட்டனர். அதன்படி, அவருக்கு ஏற்கனவே பெண் ஒருவருடன் திருமணம் ஆனதாகவும், அவர் இறந்துவிட்ட பின்னர் வேறொரு பெண்ணை வீட்டை எதிர்த்து திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகவும் தகவல்கள் பகிரப்படுகின்றன. இந்த தகவல்களை திவாகர் தரப்பு உறுதி செய்யாத பட்சத்தில், அவருக்கு எதிரான அவதூறு பரப்பும் செயல் என திவாகரின் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சொந்தம், ஊர்க்காரன் என்று பேசியதை அவதூறாக பரப்புவதாக திவாகர் குற்றசாட்டு:
திவாகர் மீது குற்றசாட்டு வைக்கும் நபர்:
திவாகர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள்:
Note: சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட தரவுகள் உட்பொதியப்பட்டுள்ளன