பிக் பாஸ் சுஜா வருணிக்கு குவியும் வாழ்த்துக்கள்! இதுதான் காரணமா?
Bigg boss suja varunee got pregnant

தமிழ் சினிமாவில் தனது அழகான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. என்னதான் பல்வேறு சினிமாவில் நடித்திருந்தாலும் இவர் அதிகம் பிரபலமானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம்தான்.
நடிகை ஓவியாப்போல் சுஜா நடந்துகொள்ள முயற்சிக்கிறார் என்ற புகார்கள் வந்தாலும் போட்டியின் இருந்து வரை சென்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் சுஜா. அதன்பின்னர் சிவாஜி குடும்பத்தை சேர்ந்த சிவகுமார் என்பவரை காதலித்து சுஜா திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் சுஜா கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் நடிகை எமி ஜாக்சன் இதேபோன்று புகைப்படம் வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாய் அறிவித்தார். அதேபோல சுஜா கணவரும் தற்போது புகைப்படம் வெளியிட்டு சுஜா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.