×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் வீட்டின் படுக்கையறையில் ரொமான்ஸ் செய்யும் பாலாஜி ஷிவானி - வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் வீட்டின் படுக்கையறையில் ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் ரொமான்ஸ் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகிவருகிறது.

Advertisement

பிக்பாஸ் வீட்டின் படுக்கையறையில் ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் ரொமான்ஸ் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகிவருகிறது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை நடிகை ரேக்கா மற்றும் வேல்முருகன் இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் வந்த பாடகி சுசித்ராவுடன் சேர்த்து தற்போது 16 பேர் இந்த போட்டியில் உள்ளனர்.

கடந்த மூன்று சீசன்களை போலவே இந்த சீசனிலும் சண்டை, சமாதானம், அழுகை, போட்டி என பிக்பாஸ் வீடு மிகவும் காரசாரமாக உள்ளது. அதுபோல் தற்போதுதான் இந்த சீசனில் காதல் டிராக் ஆரம்பித்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். காரணம், நடிகை ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் நடந்துகொள்ளும் விதம்தான் பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் மலர்ந்துள்ளதாக ரசிகர்கள் கூற காரணம்.

தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டின் படுக்கையறையில் பாடல் பாடி மிகவும் ஜாலியாக இருக்கும் நிலையில், ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் அதை சற்றுகூட கண்டுகொள்ளாமல் பாலாஜி மற்றும் ஷிவானி தனியாக பெட்டில் அமர்ந்து பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

அவர்கள் இருவரும் கொஞ்சி கொஞ்சி பேசும் அழகை பார்க்கும் ரசிகர்கள், இந்த சீசனில்  காதல் ஜோடிகளாக ஷிவானி - பாலாஜி உலாவருவதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bigg boss #bigg boss tamil #Bigg boss shivani
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story