பிக்பாஸ் கவின் அம்மா கைது பற்றி நடிகை ஷாக்க்ஷி என்ன கூறியுள்ளார் பாருங்கள்!
Bigg boss shakshi talks about kavin issue

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இதில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் விஜய் டிவி புகழ் கவின். இந்நிலையில் கவினின் தாயார் சீட்டு கம்பெனி நடத்தி மோசடி செய்துவிட்டதாகவும், இதனால் அவருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் சிலர் கவினையும் அவரது குடும்பத்தாரையும் மோசமாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் மூன்றின் போட்டியாளர்களில் ஒருவரான ஷாக்க்ஷி கவினுக்கு ஆதரவாக கருது தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கும் கவினுக்கும் பிரச்சனை இருக்கலாம். ஆனால், எண்ணுக்கும் கவினின் குடும்பத்துக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே எனது ரசிகர்கள் மற்றும் பாலோவர்ஸ் கவினையும், அவரது குடும்பத்தையும் மோசமாக கலாய்ப்பதும், ட்ரோல் செய்வதும் வேண்டாம் என கூறியுள்ளார்.