இயக்குனர் சேரனா இது? சின்ன வயசுல எப்படி இருக்கார் பாருங்க! அறிய புகைப்படம் இதோ!
Bigg boss seran young age photos

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சேரன். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் சேரன் தற்போது தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கிய திருமணம் திரைப்படமும் எதிர்பாத்த அளவு வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீசன் 3 இல் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்துகொண்டு விளையாடிவருகிறார். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிவருகிறார்.
இந்நிலையில் சேரனின் கடந்த காலம் குறித்து சேரன் ஆர்மியினர் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியிட்டு அவரை மேலும் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அவரது சிறு வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சேரன் எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்கள்.