பிக்பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! சீசன் 4 ப்ரமோ தயார்... ஒளிபரப்பு எப்போ தெரியுமா.?
Bigg boss season tamil 4 promo video is ready
பிக்பாஸ் சீசன் 4 ப்ரமோ தயாராக இருப்பதாகவும், விரைவில் ப்ரமோ வீடியோ ஒளிபரப்பாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெறும் வெற்றிபெற்ற தொடர்களில் ஒன்று பிக்பாஸ். இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளநிலையில் ஆண்டிற்கான நாகாவது சீசன் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிபோயுள்ளது. இருப்பினும் சீசன் 4 விரைவில் தொடங்க இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
சூர்யா தேவி, டிக் டாக் புகழ் இலக்கியா, அதுல்யா ரவி, கிரண் போன்றவர்களின் பெயர்கள் இந்த சீசனுக்கான போட்டியாளர்களின் பெயர்களில் அடிபட்டுவருகிறது. எது இருந்தாலும் விரைவில் பிக்பாஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது.