பிக்பாஸ் 4 ஷூட்டிங் தொடங்கியது..! பிரபல நடிகர் அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்..! ரசிகர்கள் ஆவல்..!
Bigg boss season 4 telungu shooting starts

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் தொடரின் நான்காவது சீசன் தெலுங்கில் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வீடியோ சமீபத்தில் ஒளிபரப்பானது.
தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு பிக்பாஸ் சீசன் மூன்றை தொகுத்து வழங்கிய பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா தனது புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு, மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கப்பட இருக்கும் நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 இந்தமாதம் முதலே ஒளிபரப்பாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழில் பிக்பாஸ் சீசன் நான்கு ஒளிபரப்பாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அப்படியே பிக்பாஸ் சீசன் 4 தமிழில் ஒளிபரப்பானாலும் இந்த முறை நடிகர் கமல் தொகுத்து வழங்குவாரா? அல்லது வேறு யாரேனும் ஒப்பந்தமாவார்களா என தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துள்ளனர்.