பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் இவர்தானாம்! கடைசி நேரத்தில் வெளியே கசிந்த உண்மை.
BIgg boss season 3 title winner name revealed

கடந்த நூறு நாட்களுக்கு மேலாக நடைபெறுவரும் பிக்பாஸ் சீசன் மூன்று இன்றுடன் முடிவடைகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் அனைவரும் வெளியேற்றப்பட்டு இறுதி வாரத்திற்கு லாஷ்லியா, சாண்டி, ஷெரின் மற்றும் முகேன் ஆகிய நால்வர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் போட்டியின் இறுதி நாளான இன்று யார் இந்த சீசனை வென்று 50 லட்சம் பணத்தையும், பிக்பாஸ் பட்டத்தை தட்டி செல்லப்போகிறார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்னனர். முன்னதாக தர்சன் பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் அவர் கடந்த வாரம் திடீரென வெளியேற்றப்பட்டார்.
இவரை அடுத்து சாண்டி மாஸ்டர் தான் பட்டத்தை வெல்வார் என அனைவரும் கூறிவந்த நிலையில் முகேன் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நேற்று இரவே பிரபல தயாரிப்பாளர் மற்றும் சினிமா பிரபலம், ஜே.எஸ்.கே.கோபி தன் டுவிட்டர் பக்கத்தில் முகென் தான் வின்னர் என அறிவித்திருந்தார். இதனை அடுத்து தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அதனை உறுதி செய்துள்ளது.