பிக்பாஸ் இந்த வாரம் மிக முக்கியமான வாரம்! கமல் கூறிய அதிர்ச்சி காரணம்.
Bigg boss season 3 day 62 promo 1
பிக் பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் இதுவரை 61 நாட்கள் முடிந்தவடைந்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 பட்டத்தை வெல்ல போகும் அந்த பிரபலம் யார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சாண்டி, கவின், சேரன் மற்றும் கஸ்தூரி என நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் கஸ்தூரி தான் வெளியேற்றப்பட்ட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் பிக்பாஸ் போட்டியாளர்களை கமல் சந்திக்க உள்ளார். இதுகுறித்து வெளியான இன்றைய புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் தனிப்படை இருக்கிறது என்றும், ஆனால் காதல் ஒரு பக்கம், பாசம் ஒரு பக்கம் என அவர்கள் தலைமை தாங்கும் உணர்வை இழந்துவிட்டதாகவும் விட்டதாகவும் கமல் கூறியுள்ளார்.
மேலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு இன்று உணர்த்த வேண்டும் என்று, இந்த வாரம் முக்கியமான வாரம் எனவும் கமல் கூறியுள்ளார்.