பிக்பாஸ் பைனலுக்கு பிறகு லாஷ்லியா என்ன செய்துள்ளார் பார்த்திங்களா? வைரலாகும் புகைப்படங்கள்.
Bigg boss losliya group photos with fans
கடந்த 105 நாட்களாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்துள்ளது. 16 போட்டியாளர்களில் நான்கு பேர் மட்டும் இறுதி வாரத்திற்கு தேர்வான நிலையில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த சீசனை பொறுத்தவரை கவின் மற்றும் லாஷ்லியா இருவரின் காதல் கதைதான் மிகப்பெரிய டாபிக்காக பேசப்பட்டது. இருந்தும், லாஷ்லியா எப்படியும் முதல் இடம் பிடித்துவிடுவார் என அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஆனால், லாஷ்லியா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அந்த புகைப்படங்களில் சில தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.