பிக்பாஸ் லாஸ்லியா எந்த தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்தார் தெரியுமா? இதோ!
Bigg boss lasliya worked in Shakthi TV
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் மூன்று தொடங்கி ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக செல்கிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துள்ள இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்காசன் தொகுத்து வழங்கிவருகிறார்.
இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துள்ளார் இலங்கையை சேர்ந்த இளம் பெண் லாஸ்லியா. இதுவரை எந்த ஒரு சண்டை, சர்ச்சையில் சிக்காத இவர் இளைஞர்களின் மனதை கவர்ந்து கனவு கன்னியாக வலம்வருகிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு பிரபல இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் செய்திவாசிப்பாளராக வேலை பார்த்துவந்தார் லாஸ்லியா. இவர் வேலை பார்த்த தொலைக்காட்சியின் பெயர் தற்போது தெரியவந்துள்ளது.
சக்தி டிவி என்ற தொலைக்காட்சியில்தான் செய்தி வாசிப்பாளராக வேலைபார்த்து வந்துள்ளார் லாஸ்லியா.