உண்மையை இவ்வளவு ஓப்பனாக கூறிய லாஷ்லியா! யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லையாம்!
Bigg boss lashliya talks about loves with kavin

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 59 நாட்கள் முடிந்துள்ள நிலையில் பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வெல்லப்போகும் பிரபலம் யார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கவின், ஷாக்க்ஷி, லாஷ்லியாவின் முக்கோண காதல் கதை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.
ஷாக்க்ஷி கவினை காதலிப்பதாகவும், கவின் லாஷ்லியவை காதலிப்பதாகவும் காட்சிகள் வந்த நிலையில் ஷாக்ஷியின் வெளியேற்றத்திற்கு பிறகு கவினின் ரூட் கிளியராகிவிட்டது. இந்நிலையில் லாஷ்லியாவுக்கும் கவின் மீது காதல் இருப்பதாக கூறப்பட்டுவந்த நிலையில் இன்று அது உறுதியாகியுள்ளது.
இயக்குனர் சேரனிடம் கவின் பற்றி கூறிய லாஷ்லியா, கவினை தனக்கு முன்னர் பிடிக்கும் என்றும், தற்போது அதிகம் பிடிக்கும் என்றும் கூறியதோடு இந்த உலகம் என்ன நினைத்தாலும் பரவாயில்லை தங்களது உறவை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்வது வெளியே சென்றுதான் முடிவு செய்யப்போவதாக லாஷ்லியா வெளிப்படையாக கூறியுள்ளார்.