பிக்பாஸ் அபிராமியின் தலை எழுத்தை அந்த படம் மாற்றும்- பிரபலத்தின் ஓபன் டாக்!
Bigg boss abirami in ajith nerkonta paarvai
பிக்பாஸ் சீசன் மூன்று பல்வேறு சண்டை, சர்ச்சைகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் இரண்டாவது வாரம் பாத்திமா பாபுவும், கடந்த வாரம் வனிதாவும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தற்போது 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அந்த 14 போட்டியாளர்களில் ஒருவர்தான் அபிராமி. பல்வேறு விளமபர படங்களில் நடித்துள்ள இவர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம்.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள இயக்குனரும், நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பிக்பாஸை வைத்து அபிராமியை எடைபோடாதீர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு கிடைத்த கெட்ட பெயர் நேர்கொண்ட பார்வை படம் மாற்றும், அவர் சிறந்த நடிகை என பேசியுள்ளார்.