புது மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடிய பிக்பாஸ் ஆரவ்.. வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்
மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடிய க்யூட் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆரவ்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் ஒன்றில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஆரவ். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்து இவர் பிக்பாஸ் சீசன் ஒன்றில் முதல் பரிசை தட்டி சென்றார்.
மேலும் பிக்பாஸ் சீசன் மூலம் கிடைத்த பிரபலத்தை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்த தொடங்கியது. இயக்குனர் சரண் இயக்கத்தில்
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் ஆரவ். தற்போது ராஜ பீமா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ஜோஷ்வா படத்தில் நடித்த ராஹி என்பவரை ஆரவ் காதலித்து வந்தநிலையில் இருவரும் சமீபத்தில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் இவர் தனது மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடிய க்யூட் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362