இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது இவர்தானாம்! வெளியான தகவல்கள்!
Bigg boss 5th elimination content name leaked
பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களில் இல்லாத ஓன்று இந்த சீசனில் நடந்துவருகிறது. அதுதான் கவின், சாக்க்ஷி மற்றும் லாஷ்லியாவின் முக்கோண காதல் கதை. இந்த சீசன் தொடக்கத்தில் சண்டை, சர்ச்சைகளுடன் விறுவிறுப்பாக இருந்தாலும் இந்த முக்கோண காதல் கதையால் தற்போது சற்று சலிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 16 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 12 பேர் மட்டுமே உள்ளனர். இதில் மதுமிதா, ரேஷ்மா, சாக்க்ஷி, கவின் மற்றும் அபிராமி ஆகியோர் இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் நேற்றைய நிகழ்ச்சியில் மதுமிதாவை கமல் காப்பற்றிவிட்டதால் தற்போது நான்கு பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த முக்கோண காதல் கதை ரசிகர்களுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கமலே நேற்று மேடையில் கூறினார். இதனால், முக்கோண காதல் கதையில் முக்கிய ஆளாக இருக்கும் நடிகை சாக்க்ஷி அகர்வாலே இன்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.