×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. இது தெரியாம போச்சே! பிக்பாஸ் வருணின் அம்மா இந்த தொலைக்காட்சி பிரபலமா? யார்னு பார்த்தீங்களா!!

அட.. இது தெரியாம போச்சே! பிக்பாஸ் வருணின் அம்மா இந்த தொலைக்காட்சி பிரபலமா? யார்னு பார்த்தீங்களா!!

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் தற்போது உலகநாயகன் கமல் தொகுத்து வழங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு துறையைச் சேர்ந்த 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். இவர்களில் ஒருவர்தான் வருண். அவர் மறைந்த பிரபல முன்னணி நடிகர் ஐசரி வேலனின் மகள் வழி பேரன் ஆவார்.

இந்த நிலையில் வருணும் தான் சினிமாவில் ஹீரோவாக வேண்டுமென விரும்பியுள்ளார். அதற்காக அவர் தன்னை ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்க பல பயிற்சிகளை மேற்கொண்டு மெருகேற்றி வந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில்  துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த வருண், 2019ஆம் ஆண்டு பப்பி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் கடினமான போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

 இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஐக்கி பெர்ரி தனது சக போட்டியாளர்களின் வீடுகளுக்கு சென்று வருகிறார். அவ்வாறு வருணின் வீட்டிற்கும் சென்று அவரது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்களுக்கு ஆச்சரியம். ஏனென்றால் வருணின் அம்மா பிரபலமான பியூட்டிசியன். நிறைய டிவி சேனல்களில் அழகு குறிப்புகளை வழங்கி மக்கள் மத்தியில் பரிச்சயமானவர். அவரைக் கண்ட ரசிகர்கள் இவங்கதான் வருணின் அம்மாவா! நாங்கள் பலமுறை டிவியில் பார்த்துள்ளோம் என கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Varun #mother #bigboss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story