×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று நடிகர் சிம்புவை சந்தித்துள்ள பிக்பாஸ் பிரபலம்! தீயாய் பரவும் புகைப்படம்!!

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று நடிகர் சிம்புவை சந்தித்துள்ள பிக்பாஸ் பிரபலம்! யார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக  வளர்ந்து வரும் சிம்பு தற்போது கௌதம் மேனனுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். 

அந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்று வசூல் சாதனையும் படைத்தது. இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியது.

வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். இவர் பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகர் வருணின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்புவை பிக்பாஸ் வருண் சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simbu #Varun #shooting
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story