×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் கொடுத்த கலக்கலான டாஸ்கால் கலகலப்பான வீடு! மோதலை மறந்து செம ஜாலியான போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி வாக்குவாதங்கள், சண்டைகள், உற்சாகங்கள், விழாக்கள் என நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும். பரபரப்பாகவும் 32 நாட்களை கடந்துள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்கால்  போட்டியாளர்களுக்கு இடையே மோதல்கள் நீடித்த வண்ணம் உள்ளது.

மேலும் பிக்பாஸ் வீட்டில் முதன்முதலாக நிகழ்ச்சி தொடங்கிய  இரண்டாவது வாரத்தில் ரேகா வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கடந்த வாரம் வேல்முருகன் குறைந்த வாக்குகளைப்பெற்று வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக்கும் வகையில் இன்று புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த டாஸ்க்கில் நேற்றுவரை மோதலில் ஈடுபட்டு வந்த போட்டியாளர்கள் என  அனைவரும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியுடன் சிரித்து விளையாடியுள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி, வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #Promo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story