×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செம ஆவேசமாக பிரியங்காவை வெளுத்து வாங்கிய தாமரை! என்னதான் நடந்தது? வைரலாகும் வீடியோ.!

செம ஆவேசமாக பிரியங்காவை வெளுத்து வாங்கிய தாமரை! என்னதான் நடந்தது? வைரலாகும் வீடியோ.!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாகவும் நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், மோதல்கள் என சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. இதனை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் கடந்த வார இறுதியில் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் ஐக்கி பெர்ரி குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் பிரியங்கா தாமரை குறித்து சூசகமாக பேச ஆவேசமடைந்த அவர் பொங்கி எழுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில் போட்டி குறித்து சற்று புரியாமல் இருந்த தாமரை தற்போது நன்கு அனைவரையும் புரிந்து கொண்டு சாமர்த்தியமாக விளையாடி வருகிறார். மேலும் தன்னைக் குறித்து பேசுபவர்களுக்கு எதிராகவும் தைரியமாக குரல் எழுப்பி வருகிறார். இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #Promo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story