×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அப்படியே வெளியே அனுப்பிட போறாங்க.! பெண் போட்டியாளரை லெப்ட் ரைட் வாங்கிய கமல்.! வைரல் வீடியோ!!

அப்படியே வெளியே அனுப்பிட போறாங்க.! பெண் போட்டியாளரை லெப்ட் ரைட் வாங்கிய கமல்.! வைரல் வீடியோ!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கி தற்போது அன்பு,நட்பு, கலகலப்பு மட்டுமின்றி சண்டை சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியும் நடிகர் கமல் வருகைதந்து வாரத்தில் நடந்த அனைத்து டாஸ்க் மற்றும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவார். அவ்வாறு இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த கமல் அந்த வாரம் நடந்த விஷயங்கள் குறித்து போட்டியாளர்களிடம் பேசியுள்ளார். அப்பொழுது தனலட்சுமி அவரிடம், நினைத்ததை பேசலாம் என வந்தேன். ஆனால் இங்கு அதை செய்ய முடியவில்லை என கூறியுள்ளார்.

அதற்கு கமல், வெளியே மட்டும் உங்களுக்கு அதற்கு வாய்ப்பு கொடுத்தாங்களா. இங்கு அதான் சவால். போனை எடுத்து ஏதேதோ செய்கிறீர்கள். அந்த முனைப்பு ஏன் இதில் காட்டமாட்டேங்குறீங்க. மனமுடைந்து வெளியே போய் அழறீங்க, அப்படியே வெளியே அனுப்பிட போறாங்க என விளாசியுள்ளார். அந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது. 

தனலட்சுமி கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்த பல பிரச்சனைகளிலும் இருந்துள்ளார். மேலும் அவர் ஜி.பி முத்துவிடம் பேசிய விதம், அவரை குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் ஆவேசத்தை கிளப்பியது. மேலும் சமூக வலைதளங்களில் அவர் குறித்த ட்ரோல்களும் வைரலானது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Promo #bigboss #kamal
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story