×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் ரியோ கூறிய அந்த வார்த்தையால், கடுப்பாகி சீறிவந்த ரம்யா! திணறிபோன பிக்பாஸ் வீடு! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஷம் குறித்து ரியோ பேச கோபத்தில் ரம்யா பாண்டியன் பொங்கியெழுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், சண்டைகள், சுவாரசியங்கள் என அதிகமாகிக்கொண்டு,  மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

மேலும் கடந்த வாரம் முதன்முதலாக பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். மேலும் நேற்று பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் போட்டியாளருக்கு இடையே பல மோதல்களை கிளப்பியது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்த நிலையில், ரியோ குரூப்பிஸம் என்ற வார்த்தையை கூற உடனே பொங்கி எழுந்த ரம்யா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதனால் இன்று மீண்டும் மோதல் கிளம்பியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி  எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #ramya #rio
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story