×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்யாண வீட்டில் வெடித்த மோதல்! அதிரடி திருப்பங்களுடன் வெளியான பிக்பாஸ் சீசன் 5ன் அசத்தலான புதிய ப்ரோமோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அமோக வரவேற்பு உள்ளது. இந்நிகழ்ச்சியை அனைவரும் ரசித்து பார்க்கின்றனர். கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளநிலையில் விரைவில் பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பமாகவுள்ளது.

இந்த சீசனையும் நடிகர் கமலை தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளவுள்ளனர் என தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக சில பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் பிக்பாஸ் சீசன் 5ன் முதல் ப்ரமோ வெளியானது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்களை மையமாகக்கொண்டு புதிய ப்ரமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ப்ரோமோவில் கமல் ' ஆயிரம் பொருத்தம் பார்த்து நடத்தும் கல்யாண வீட்டுலயே இவ்ளோ கலாட்டா இருக்கும் போது, வீடும் பெருசு, கலாட்டாவும் பெருசு.. எதிர்பாராததை எதிர்பாருங்கள், பிக்பாஸ் தமிழ் சீசன் 5 விரைவில் என கமல் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss season 5 #Promo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story