×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழக முதல்வரை நேரில் சந்தித்த சித்தப்பு சரவணன்! என்ன காரணம் தெரியுமா?

பிரபல நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான சரவணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துள்ளார்.

Advertisement

1990களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் சரவணன். வைதேகி வந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சூரியன் சந்திரன், நல்லதே நடக்கும்,  பொண்டாட்டி ராஜ்யம், தாய் மனசு என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

நடிகர் சரவணன் தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். மேலும் பருத்திவீரன் திரைப்படத்தில் சித்தப்பு செவ்வாழையாக அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டது. அதை தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அப்பொழுது அனைவரிடமும் நன்கு சிரித்து பேசி ரசிகர்களை ரசிக்கவைத்த அவர் சில சர்ச்சைகளிலும் சிக்கினார். அதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு சரவணன் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து அவர் மரியாதை நிமிர்த்தமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#palanisamy #saravanan #bigboss
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story