×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. இவர்தான் பிக்பாஸ் ராஜுவின் மனைவியா! சூப்பர் ஜோடி! வைரலாகும் அழகிய திருமண புகைப்படம்!!

வாவ்.. இவர்தான் பிக்பாஸ் ராஜுவின் மனைவியா! சூப்பர் ஜோடி! வைரலாகும் அழகிய திருமண புகைப்படம்!!

Advertisement

பிக்பாஸ் சீசன் 5 விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சேர்ந்து கொண்டுள்ளது. இந்த சீசனும் முந்தைய சீசன்களை போல, அன்பு, மோதல், வாக்குவாதம் என சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் ராஜு. 

இவர் முன்னணி நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ள ராஜு  அண்மையில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் ஹீரோவான மாயனின் நண்பனாக நடித்து அனைவரையும் பெருமளவில் கவர்ந்தார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அவர் பிற போட்டியாளர்களிடம் தேவையில்லாத வம்பு, சண்டை என எதுவும் இல்லாமல் இருந்து வருகிறார். மேலும் அவ்வப்போது தனது மிமிக்ரி திறமையால் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் ராஜூ அவரது மனைவியுடன் மாலையும், கழுத்துமாக இருக்கும் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அழகிய ஜோடி என புகழ்ந்து வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rajoo #marriage #Wife
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story