×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்னும் திருமணமே ஆகவில்லை..அதற்குள் மகனா?? பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!

Bigboss raiza post photo with kitten

Advertisement

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்1 ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாடல் அழகி ரைஸா வில்சன். இவர்  ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகளும் குவியத் துவங்கியது.

முதன்முதலாக அவர் ஹீரோயினாக நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத்தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர், ஹேஷ்டேக் லவ், காதலிக்க யாருமில்லை,  அலைஸ் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், வீட்டில் இருக்கும் நடிகை ரைசா தனது செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டு,  அதனுடன் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தனியாக ஒரு மரத்தினடியில் தனது செல்ல பூனை குட்டியுடன் அமர்ந்திருக்கும் ரைசா, அந்த புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டு,  என்னுடனும் என் மகனுடனும் யாரும் பேசாதீர்கள் என பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் திருமணமே ஆகவில்லை அதற்குள் மகனா என ஷாக்காகி கிண்டலாக கமெண்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Raiza #bigboss #son
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story