×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வனிதா சொன்ன அந்த வார்த்தை! ஆவேசத்தில் கொந்தளித்த ரம்யா கிருஷ்ணன்! வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பொழுது போக்கும் வகையிலும் எக்கச்ச

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பொழுது போக்கும் வகையிலும் எக்கச்சக்கமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவ்வாறு அண்மையில் தொடங்கி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடிகள்.

நடன நிகழ்ச்சியான இதில் பிக்பாஸ் நான்கு சீசனிலும் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர்கள் பங்கேற்கின்றனர். ஆஜித்- கேப்ரில்லா, சென்றாயன்-ஜூலி, ஜித்தன் ரமேஷ்- சம்யுக்தா, அனிதா சம்பத்- ஷாரிக், நிஷா- பாலாஜி, சோம்-ஐஸ்வர்யா, பாத்திமா பாபு- மோகன் வைத்யா உள்ளிட்ட பலரும் ஜோடியாக போட்டியாளர்களாக  கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் காளி வேடம் போட்டு ஆடிய வனிதா,தன்னை மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட வேண்டாம் என கூறுகிறார். அதற்கு ரம்யா கிருஷ்ணன் போட்டி என்றால் என்ன? இரு போட்டியாளர்களை ஒப்பிடக் கூடாது என எப்படி நீங்கள் சொல்லலாம்? என ஆவேசமாக கூறியுள்ளார். உடனே மைக்கை கொடுத்துவிட்டு வனிதா செட்டை விட்டு வெளியேறுகிறார். இந்த வீடியோ வைரலாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Promo #Bigboss jodikal
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story