×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் வீட்டிற்கு குட்பை! இந்த வாரம் வெளியேறப் போவது இவரா! கசிந்த ஷாக் தகவல்!!

பிக்பாஸ் வீட்டிற்கு குட்பை! இந்த வாரம் வெளியேறப் போவது இவரா! கசிந்த ஷாக் தகவல்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சண்டை, வாக்குவாதங்கள், சமாதானம் என அதிரடியாகவும் சென்று கொண்டுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ், போட்டியாளர்கள் அனைவரையும் நாமினேட் செய்தார். பின்னர் அவற்றிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள வித்தியாசமான, கடினமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது.

அதனை பல தகராறு, வாக்குவாதங்களுடன் வெறித்தனமாக செய்த நிலையில், சிபி, நீரூப், தாமரை, அமீர், சஞ்சீவ் ஆகியோர் நாமினேஷனிலிருந்து தப்பித்தனர். ஆனால் அவர்களை தொடர்ந்து ராஜு, அக்ஷரா, வருண், பாவனி, பிரியங்கா, அபினய் ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுப்பி வந்த நிலையில், வருண் அல்லது அபினய் யாரேனும் ஒருவர் வெளியேறலாம் என கூறப்பட்டது. ஆனால் தற்போது குறைந்த வாக்குகளை பெற்று அபினய் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளிவந்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #elimination #Abinay
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story