சூப்பர்..லாஸ்லியாவின் படத்தில் இணையும் மற்றுமொரு பிக்பாஸ்3 பிரபலம்! யாருனு தெரிஞ்சா செம ஷாக்காகிருவீங்க!
bigboss abirami join in losliya movie

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன். இதன் சீசன் 3ல் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த செய்திவாசிப்பாளர் லாஸ்லியா.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களிலேயே இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் மற்றும் ஆர்மி உருவானது. அதனை தொடர்ந்து கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய அவர் இறுதிவரை சென்று மூன்றாம் இடத்தை வென்றார்.அதனை தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளிலும், விருது விழாக்களிலும் பிஸியாக இருந்த லாஸ்லியா தற்போது ஹீரோயினாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
நெடுஞ்சாலை படத்தின் ஹீரோ ஆரியுடன் இணைந்து லாஸ்லியா நடிக்க உள்ளார். மேலும் அவர்களுடன் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் இணைந்து நடிக்க உள்ளார். இதன் புகைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் மற்றொரு தகவலும் வெளிவந்துள்ளது.
அதாவது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகையும், தொகுப்பாளினியுமான அபிராமியும் இப்படத்தில் லாஸ்லியாவுடன் இணைந்து நடிக்க உள்ளார். இது குறித்த தகவலை நடிகர் ஆரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.